WhatsApp Image 2025 03 10 at 10.23.23 1

மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான களஞ்சிய முகாமைத்தும் தொடர்பான செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டத்தில் 10.03.2025 அன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் மேற்பார்வையின் கீழ் மாவட்ட செயலக மற்றும் 14 பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு களஞ்சிய முகாமைத்துவம் தொடர்பான அறிவாண்மையை மேம்படுத்துவதற்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் எற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக கணக்காளர் எம். முகிலன் அவர்கள் களஞ்சிய முகாமைத்துவம் தொடர்பான தெளிவூட்டல்களை வழங்கியதுடன் உத்தியோகத்தர்களில் ஐய வினாக்களுக்கான தீர்வுகள் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கினார். அலுவலக நடைமுறையில்  முக்கியமான அம்சமாக கருதப்படும் களஞ்சிய முகாமைத்துவத்தை சிறந்த முறையில்  மேற்கொள்வதனால்   வினைத்திறனான சேவைகளை மக்களுக்கு வழங்க முடியும்.

WhatsApp Image 2025 03 10 at 10.23.23 1 WhatsApp Image 2025 03 10 at 10.23.23 WhatsApp Image 2025 03 10 at 10.23.24 1 WhatsApp Image 2025 03 10 at 10.23.22

WhatsApp Image 2025 03 10 at 10.23.22 1 WhatsApp Image 2025 03 10 at 10.23.23 2 WhatsApp Image 2025 03 10 at 10.23.24