மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக சுற்றுநிருபத்தினை அரச உத்தியோகத்தர்களுக்கு தெளிவுப்படுத்தும் பயிற்சிப்பட்டரை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் நேற்று 30.09.2019 நடைபெற்றது.
இங்கு கருத்து தெரிவித்த தேசிய உரச்செயலக உதவிப்பணிப்பாளர், பெரும்போக சுற்றுநிருபத்தில் விவசாயிகள் பயிற்செய்கை செய்வதற்கு என்று அரச மானிய உரங்களை பெற்று சட்டவிரோதமாக பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும், விவசாயிகள் உரங்களை உரிய காலத்தில் பெற்று பயிற்ச்செய்கை பயன்படுத்தவேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் தேசிய உரச்செயலக உதவிப்பணிப்பாளர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி.நவரூபரஞ்சினி முகுந்தன், அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எஸ்.என்.சியாத், கமநல உத்தியோகத்தர்கள், பிரதம கணக்காளர் திரு.மு.ஜெகதீஸ்வரன,கணக்காளர் திரு.எஸ்.பிரேமகுமார் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.





