WhatsApp Image 2025 03 12 at 10.10.36

“பாதுகாப்பான, முறையான மற்றும் சட்டரீதியான புலம்பெயர்வை உறுதிசெய்தல்” தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் ஆரம்ப நிகழ்வு, மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில்  12.03.2025 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

AMCOR தேசிய தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில், ICMPD நிறுவனத்தின் நிதி அனுசரணையில், ஆரம்பித்து வைக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்வில் நிர்வாக உத்தியோகத்தர் K.மதிவண்ணன், அரசு சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ULM. றிஸ்வி, மாவட்ட தகவல் அதிகாரி வ.ஜீவானந்தன், AMCOR நிறுவனத்தின் ஸ்தாபகரும், தேசியப் பணிப்பாளருமான பரமசிவம் முரளிதரன், AMCOR நிறுவன சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் யோ. சிவயோகராஜன் மற்றும் AMCOR நிறுவன உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்வு, புலம்பெயர்வாளர்களின் பாதுகாப்பு மற்றும் சட்டரீதியான முறையில் புலம்பெயர்வதை உறுதி செய்யும் முக்கியத்துவத்தை சமூகத்தில் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

WhatsApp Image 2025 03 12 at 10.10.36 WhatsApp Image 2025 03 12 at 10.10.39 2 WhatsApp Image 2025 03 12 at 10.10.37 WhatsApp Image 2025 03 12 at 10.10.37 1

WhatsApp Image 2025 03 12 at 10.10.38 1 WhatsApp Image 2025 03 12 at 10.10.39 3