WhatsApp Image 2025 03 25 at 19.04.19 1

மட்டக்களப்பு  மாவட்ட செயலகத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட புனித இப்தார் நிகழ்வு  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 25.03.2025 அன்று மாலை இடம்பெற்றது. கிராத் ஓதலுடன் இப்தார் நிகழ்வுகள் ஆரம்பமாகியதுடன், இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் இப்புனித ரமழான் மாதத்தில் அன்பையும் பாசத்தையும்  சகோதரத்துவதத்தினையும் மேலும் வலுச்சேர்க்கும் முகமாக இந்நிகழ்வு அமையப்பெற்றுள்ளதாக தெரிவித்தார். இதன்போது கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அஷ்ஷெஹ்  அவர்களினால் புனித ரமழான் விசேட உரை  நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில்  மேலதிக அரசாங்க அதிபர்களான  திருமதி சுதர்சினி ஶ்ரீகாந்த்,  திருமதி நவருபரஞ்ஜினி முகுந்தன், ஓய்வு பெற்ற பிரதம  கணக்காளர் எம்.எஸ்.பசீர், உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.வி.எம் சுபியான், மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.ஏப்.ஏ. சனீர், தேசிய உரச் செயலக மாவட்ட பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுதின், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர்,  ஸலாமா நிறுவனத்தினர் என பலர் கலந்து கொண்டனர். குறித்த  இப்தார் நிகழ்வு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2025 03 25 at 19.04.19 1 WhatsApp Image 2025 03 25 at 19.04.19 WhatsApp Image 2025 03 25 at 19.04.09 WhatsApp Image 2025 03 25 at 19.04.08

WhatsApp Image 2025 03 25 at 19.04.18 WhatsApp Image 2025 03 25 at 19.04.07 WhatsApp Image 2025 03 25 at 19.04.18 1 WhatsApp Image 2025 03 25 at 19.04.17 1

WhatsApp Image 2025 03 25 at 19.04.17 WhatsApp Image 2025 03 25 at 19.04.16 1 WhatsApp Image 2025 03 25 at 19.04.16 WhatsApp Image 2025 03 25 at 19.04.15

WhatsApp Image 2025 03 25 at 19.04.12 WhatsApp Image 2025 03 25 at 19.04.06