
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு பொதுத்துறையில் பணிப்பாய்ச்சலை உருமாற்றுதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு கைப்பேசி செயலி ஒருங்கமைப்பு தொடர்பான ஒரு நாள் பயிற்சி பாசறை பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 27.03.2025 அன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் வழிகாட்டுதலில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஶ்ரீகாந்த அவர்களின் மேற்பார்வையின் கீழ் நா.விஜயதாஸ் ஒருங்கமைப்பில் இடம்பெற்ற பயிற்சி பாசறையில் போரதீவுப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் திரு. வி.துலாஞ்சனன் அவர்கள் வளவாடினார்.
அரச சேவைகளின்போது செயற்கை நுண்ணறிவுகளை பயன்படுத்தி வினைத்திறனான சேவை வழங்குவதற்கு தேவையான ஆலோசனைகள் இதன்போது வழங்கப்பட்டன. மேலும் எமது நாட்டின் பொதுத் துறையில் எவ்வாறான நுண்ணறிவுகளை பயன்படுத்துவது தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன் இடர் முகாமைத்துவம், வாகன நெரிசல் கண்காணிப்பு முகாமைத்துவம், நோய் இனங்காணல், ஆட்களை இனங்காணல் போன்ற பலவிடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.






