
மட்டக்களப்பில் நான்கு சபைகளுக்கான 3657 காப்புறுதி செய்யப்பட்ட அஞ்சல் வாக்குச் சீட்டுக்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் அஞ்சல் திணைக்கள அதிகாரியிடம் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 07.04.2025 அன்று கையளிக்கப்பட்டது. ஆரம்ப கட்டமாக மண்முனை மேற்கு, ஏறாவூர் நகர், மண்முனை தென் எருவில்பற்று, கோறளைப்பற்று மேற்கு ஆகிய சபைகளுக்கான காப்புறுதி செய்யப்பட்ட அஞ்சல் வாக்குச் சீட்டுக்கள் கையளிப்பு செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் உள்ளூர் அதிகார சபை தேர்தல் மே மாதம் 06 ஆம் திகதி இடம் பெறவுள்ள நிலையில் மாவட்டத்தில் 11554 உத்தியோகத்தர்கள் தபால் மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றுள்ளனர். அஞ்சல் வாக்கு அடையாளம் இடும் தினங்களாக 22.04.2025 ஆம் திகதி , மாவட்ட செயலகம், மாவட்ட தேர்தல்கள் அலுவலகம், பொலிஸ், விசேட அதிரடிப்படை, பாதுகாப்பு பிரிவுகள், 23.04.2025 மற்றும் 24.04.2025 ஆம் தினங்களில் ஏனைய அரச நிறுவனங்கள், முப்படைகள், 28.04.2025 மற்றும் 29.04.2025 ஆம் தினங்களில் மீள்வாக்களிப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திலும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.பி.எம் சுபியான் அவர்கள் கலந்து கொண்டார்.






