
மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தினால் முதல் முறையாக வெளியிடப்பட்ட, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளிவரும் சஞ்சிகையான "மீன் பாடும் சாரணியம்" சஞ்சிகை, இன்று திராய்மடு மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைவியாகவும் பணியாற்றும் திருமதி J.J. முரளிதரன் அவர்களிடம், மாவட்ட சாரணர் ஆணையாளர் திரு K. அமிதன் அவர்கள் இதனை கையளித்தார்.
இந்நிகழ்வில்,தலைமையக ஆணையாளர் திரு P. சசிக்குமார், உதவி மாவட்ட ஆணையாளர் (நிர்வாகம்) திரு N. நிஷாந்தன், மற்றும் உதவி மாவட்ட ஆணையாளர் Dr. P. தினேஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர். சஞ்சிகை வெளியீட்டுடன் இணைந்து, மாவட்ட அரசாங்க அதிபருடன் சாரணர் சங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களைப் பற்றிய ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது.






