
உள்ளூர் அதிகார சபை தேர்தலின் போது கடமையில் ஈடுபடவுள்ள கனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலின் போது கடமையில் ஈடுபடும் கனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான பயிற்சி செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியான் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 15.04.2025 அன்று இடம்பெற்றது.
தேர்தல் கடமைகளில் ஈடுபடும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த விடயங்கள் தொடர்பாகவும், தேர்தல்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக தெளிவூட்டப்பட்டது. மேலும் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலருடன் இணைந்து வினைத்திறனான சேவையை வழங்க வேண்டும் என இச்செயலமர்வின் போது சுட்டிக்காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.






