WhatsApp Image 2025 04 29 at 08.18.19

எதிர்வரும் உள்ளூர் அதிகார சபை தேர்தல் கடமைகளில் கடமையாற்றவுள்ள வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் உதவி தேர்தல்கள் ஆணையாளர்  எம்.எ.எம்.சுபியான் அவர்களின் ஏற்பாட்டில் ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  28.04.2025 அன்று இடம்பெற்றது.

இதன்போது வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்கள் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள், தேர்தல்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக தெளிவூட்டப்பட்டதுடன்  அதிகாரிகளின் ஐய வினாக்களுக்கான விளக்கங்களும் வழங்கப்பட்டன. மாவட்டத்தில் வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்களினால்  30 வலயங்கள்  மேற்பார்வை  செய்யபடவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த்,  திருமதி நவரூபரஞ்ஜினி முகுந்தன் (காணி), மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திருமதி காயத்திரி ரமேஷ் மற்றும் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 04 29 at 08.18.24 WhatsApp Image 2025 04 29 at 08.18.19 WhatsApp Image 2025 04 29 at 08.17.51 WhatsApp Image 2025 04 29 at 08.17.59

WhatsApp Image 2025 04 29 at 08.18.19 1 WhatsApp Image 2025 04 29 at 08.18.20