voting

உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2025  மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மாநகர சபை, ஏறாவூர், காத்தான்குடி நகர சபை, ஏறாவூர் பற்று, கோறளை பற்று , கோறளை பற்று மேற்கு, கோறளை பற்று வடக்கு, மண்முனை தென் எருவில் பற்று, மண்முனை பற்று, மண்முனை மேற்கு, மண்முனை தென் மேற்கு மற்றும் போரதீவுப்பற்று ஆகிய 9 பிரதேச சபைகளுக்கான 274 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் 06.05.2025 அன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு அமைதியான முறையில்  இடம்பெற்று பிற்பகல் 04.00 மணியுடன்  நிறைவடைந்தது.

மாவட்டத்தில்  477 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு இடம்பெற்று 144 வாக்கெண்ணும் நிலையங்களில் பி.ப 04.30 மணிக்கு வாக்கெண்ணல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. மாவட்டத்தில் 4,55520  வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ள நிலையில்  மாலை 04.00 மணிக்கு வாக்களிப்பு நிறைவுற்று 60.69  வீதமான வாக்குகள்  பதிவாகியுள்ளது.