WhatsApp Image 2025 05 14 at 15.49.11 1

மட்டக்களப்பு மாவட்ட  செயலகத்தில் போதைப்பொருள் முற்தடுப்பை மேற்கொள்வதற்கு முதுமானி பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சிப்பாசறை இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் வழிகாட்டுதலில் மாவட்டத்தில் போதைப்பொருள் முற்தடுப்பை மேற்கொள்வதற்கான முதுமானி பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சியானது  மாவட்ட செயலக மண்டபத்தில் மாவட்ட போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் ப.தினேஷ் ஏற்பாட்டில் இடம் பெற்றது.

மாவட்டத்தில் போதைப் பொருள் முற்தடுப்பு  செயற்றிட்டத்தை  வலுவூட்டும் செயற்றிட்டமாக இந்நிகழ்வு இடம்பெற்றது. கிராம, பிரதேச மட்டத்தில் போதைப்பொருள் பாவனையை   தடுப்பதற்கு தேவையான விழிப்புணர்வுகள் இவ் உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வில் வளவாளராக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய  சிரேஷ்ட நிகழ்ச்சி திட்ட அதிகாரி ஏ.சி.றஹீம், நிகழ்ச்சி திட்ட அதிகாரி திருமதி எஸ். நிதர்ஷனா,  போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர்கள், சமுதாயசார் சீர்திருத்த  உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் என  பலர் கலந்து கொண்டனர். தேசிய ரீதியில் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்ச்சி திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

WhatsApp Image 2025 05 14 at 15.49.11 1 WhatsApp Image 2025 05 14 at 15.49.09 WhatsApp Image 2025 05 14 at 15.49.09 1 WhatsApp Image 2025 05 14 at 15.49.10