சமூகப்பாதுகாப்பு செயற்றிட்டம் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் செயலமர்வொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற செயலமர்வினை சமூகப் பாதுகாப்பு நிபுணர் கே.விமலநாதன் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஶ்ரீகாந்த், சமூகப் பாதுகாப்பு செயற்றிட்ட நிபுணர்களான உப்புல் விறாமனகே, அமில பிறியங்க ஆகியோர் கலந்து கொண்டு மன குறைகளை தீர்ப்பது தொடர்பான செயலமர்வினை நடாத்தியிருந்தனர்.
சமூகப் பாதுகாப்பு தரவு பதிவேற்றம், அஸ்வெசும செயற்றிட்டம் மற்றும் அதன் எண்ணக்கரு, சமூக பாதுகாப்ப்பு என்றால் என்ன?, சமூக பாதுகாப்பு தொடர்பில் எதிர்நோக்கும் பிரச்சனைகள், அவற்றை தீர்த்து வைப்பதற்கான வழிமுறைகள், சமூகப் பதிவேடு (தரவும் கட்டமைப்பு), தரவுக் கட்டமைப்பு பாதுகாப்பு முறைமைகள் தொடர்பாக இதன்போது தெளிவுபடுத்தியிருந்தனர்.குறித்த முழு நாள் செயலமர்வில் உதவி பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் விடய உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் விடயத்துடன் தொடர்புபட்ட உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.





