சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் விழிப்புணர்வு நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநீதன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் 05.06.2025 அன்று இடம்பெற்றது.பிளாஸ்திக் மாசாக்கத்தை முடிவுக்கு கொண்டு வருதல் (Ending plastic pollution) எனும் தொனிப்பொருளை மையமாக கொண்டு நாட;ளாவிய ரீதியில் பல நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றன.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளரினால் நிலைபேறான சுற்றாடல் மற்றும் சூழல் நேயமிக்க பிரதேசமாக உருவாக்கும் நோக்கில் "பொலித்தீன் பாவனையின் விளைவுகள் மற்றும் கழிவு முகாமைத்துவம்" தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இவ்வருட சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் கொள்கலன்களை சேகரிக்கும் தொட்டியானது செயலக வளாகத்தில் நிறுவப்பட்டதுடன் அதிதிகளினால் பலன்தரு மரங்கள் நடப்பட்டமை குறிப்படத்தக்கதாகும். இந்நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.





