
மட்டக்களப்பு சமுர்த்தி மற்றும் அஸ்வெசும பயனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தல் தொடர்பான செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ். ராஜ்பாபு அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில் 17.06.2025 அன்று இடம்பெற்றது. சமுர்த்தி மற்றும் அஸ்வெசும பயனாளிகளின் வாழ்வாதாரத்தை விருத்தி செய்வதற்கு சமுதாய அடிப்படை அமைப்புக்கள் மற்றும் பிரதேச அமைப்புக்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதனை நோக்காகக்கொண்டு தொழில்வாய்ப்புக்களை இனங்காணல், சந்தைப்படுத்தல்,ஏற்றுமதி சார்ந்த ஆலோசனைகள் இதன்போது நிபுணர்களினால் வழங்கப்பட்டன.சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச சமுதாய இனம் அமைப்புக்களின் தலைவர்களுக்கு விழிப்புணர்வும் புதிய பெறுமதிசேர் ஏற்றுமதி பொருளாதாரத்தினை இனங்கண்டு மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எமது மாவட்டத்திலிருந்து அந்திய செலாவணியை பெற்றுக் கொள்வதற்கு பல பெறுமதிசேர் பொருட்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். அவற்றுக்கான சந்தை வாய்ப்பை இனங்கண்டு செயற்படுவதனால் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதுடன் நவீன காலத்திற்கு தேவையான தொழில் வழிகாட்டல் ஆலோசனைகளை இதன்போது வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வின் வளவாளராக தேசிய தொழில்முயற்சி அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளர் சிவகுமாரி, மட்டக்களப்பு மாவட்ட வியாபார மேம்படுத்தல் உத்தியோகத்தர் என். கோகுலதாஸ் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஸ்வர்ணா ஆகியோர் மேற்கொண்டனர். இந்நிகழ்வில்சிரேஸ்ட சமுர்த்தி முகாமையாளர் ஜே.எப். மனோகிதராஜ், , சமுதாய அமைப்பு மாவட்ட முகாமையாளர் பகிரதன், வங்கி முகாமையாளர், மாவட்ட கண்காணிப்பு முகாமையாளர்கள், மாவட்ட உள்ளக கணக்காய்வு முகாமையாளர், முகாமைத்துவ பணிப்பாளர்கள், கருத்திட்ட முகாமையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்,பிரதேச சமுதாய அமைப்பின் தலைவர், செயலாளர் என பலர் கலந்து கொண்டனர்.







