
மட்டக்களப்பில் செயற்கை நுண்ணறிவு மூலம் நிர்வாகத்தை மேம்படுத்தல் – அரச உத்தியோகத்தர்களின் கொள்ளளவு மேம்பாட்டிற்கான செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயலமர்வானது, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் மேற்பார்வையின் கீழ், தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்தில் 17.07.2025 அன்று இடம்பெற்றது.
மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகர்களை, செயற்கை நுண்ணறிவின் வழியாக நிர்வாக மேம்பாட்டை வினைத்திறனாக மேற்கொள்வதற்கு தேவையான ஆலோசனைகள் இந்நிகழ்வின் போது வழங்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு தொடர்பாக ஐ.ஏப்.எஸ் நிறுவனம் சார்ந்த அதிகாரி திரு. மனோகரராஜா விக்னராஜ் வழங்கினார். மேலும், கிளவுட் (Cloud) தொழில்நுட்பத்தின் வழியாக நிர்வாக செயற்பாட்டை மேம்படுத்தல் தொடர்பாகவும் இந்நிகழ்வில் தெளிவுபடுத்தப்பட்டது.






