WhatsApp Image 2025 07 17 at 16.10.14 1

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய நாடுகள் நிதி உதவியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் மேற்பார்வையில் புதிய மாவட்ட செயலகத்தில் 17.07.2025 அன்று இடம்பெற்றது. மாவட்டத்தில் ஐக்கிய நாடுகள் நிதி உதவியின் கீழ் நிலைபெறான அபிவிருத்திஇ சமூக நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை மேம்படுத்தல், சமூகங்களை வலுப்படுத்தல், நிலைபெறான மீள்குடியேற்றம் போன்ற பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 

இச் செயற்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பாக சுயாதீன மதிப்பீட்டு குழுவினரால் செயற்திட்ட மீளாய்வு மற்றும் கணிப்பீட்டு அறிக்கை தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் போது பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வீ. நவதீன் உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 07 17 at 16.10.14 1 WhatsApp Image 2025 07 17 at 16.10.14