WhatsApp Image 2025 07 29 at 11.46.26

மட்டக்களப்பில் உலக மனித விற்பனைக்கு எதிரான தின நிகழ்வுகள் இடம்பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தின் (ICMPD) புலம்பெயர் தகவல் மையத்தின்  (MIC) ஏற்பாட்டில்  29.07.2025 அன்று இடம் பெற்றது. இந் நிகழ்வில்  பிரதம அதிதிகளாக நியூசிலாந்து நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பிரதி உயர்ஸ்தானிகர்  கப்ரியலா ஐசாக், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் மற்றும் நியுசிலாந்து தாதுவராலய உயர் அதிகாரி பிரஷ்சி கலந்து கொண்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச மனித கடத்தல் தினம் யூலை 30ம் திகதியை  நினைவு கூறுவதற்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு  இடம் பெற்றது. 'மனித கடத்தல் ஒரு ஒருங்கமைக்கப்பட்ட குற்றம் - சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வருவோம்' எனும் இவ் ஆண்டிற்கான தொனிப்பொருளில் இடம் பெற்றது. மனித கடத்தல், மனித வியாபாரம், சட்டவிரோத புலம்பெயர்தல், கடல்வழியாக ஆட்கடத்தல்,  போன்ற பாதுகாப்பற்ற சட்டவிரோத பயணங்களால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி இதன் போது விரிவாக விளக்கங்கள் வழங்கப்பட்டது.

இடம் பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தினரினால் (ICMPD) அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்  நியுசிலாந்து நாட்டின் நிதி உதவியின் கீழ் இந் நிகழ்வு இடம் பெற்றன. இந் நிகழ்வில் வெளிநாட்டு அலுவல்கள் வெளிநாட்டு வேலைப்பு மற்றும் சுற்றுலாத்துறை  அமைச்சின் வைத்திய கலாநிதி சுகத்யாலேஹம, பிரதி பொலிஸ் மா அதிபர் நுவான் மெண்டிஸ், வெளிநாட்டு அலுவல்கள் வெளிநாட்டு வேலைப்பு மற்றும் சுற்றுலாத்துறை  அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர்  கே.நிகரில்காந்த், பிரதேச செயலாளர்கள், .பொலிஸ் அத்தியட்சகர் லீலரத்ன, இடம் பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதே மையத்தின் இணைப்பாளர் மெஹமட் சாமீர்மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 07 29 at 11.46.26 WhatsApp Image 2025 07 29 at 11.46.27 WhatsApp Image 2025 07 29 at 11.46.27 1 WhatsApp Image 2025 07 29 at 11.46.28 WhatsApp Image 2025 07 29 at 11.46.29 WhatsApp Image 2025 07 29 at 11.46.33 1