
மட்டக்களப்பில் தேசிய முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி வார நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி இணைப்பாளர் வீ.. முரளிதரன் ஏற்பாட்டில் லைட் ஹவுஸ் விளையாட்டு மைதானத்தில் 09.08.2025 திகதி அன்று இடம் பெற்றன.
நாடளாவிய ரீதியில் 'சிறுவர் நாம் உலகை வெல்வதற்கு - விளையாட்டுக்கும் இடமளியுங்கள்' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி வாரத்தினை முன்னிட்டு மாவட்ட மட்டத்தில் விசேட நிகழ்வுகள் இடம் பெற்றுவந்தது . இதன் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டசெயலகத்தினால் முன்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு மற்றும் கலை நிகழ்வுகள் சிறார்களின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் பல நிகழ்வுகள் இடம் பெற்றது .
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவின் திராய்மடு கிராம சேவகர் பிரிவினுல் உள்ள ஐந்து முன்பள்ளி பாடசாலை சிறார்களின் திறமைகள் வெளிக்காட்டப்பட்டதுடன் அரச சார்பற்ற நிறுவனங்களின் அனுசரனையில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு பரிசு பொருட்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் அரசாங்கஅதிபரினால் முன்பள்ளி ஆசிரியர்களுக்குமான கெளரவம் வழங்கப்பட்டமை . குறிப்பிடப்பிடதக்கது






