
Smart Kids பாலர் பாடசாலையின் முகாமையாளர் திருமதி.வீ.மோகநாதன் தலைமையில் மட்டக்களப்பு லேக் வீதியில் அமைந்துள்ள பாலர் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்த நிகழ்விற்கு விசேட அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்ஜெயன் கலந்து சிறப்பித்தார்.
குறித்த நிகழ்வில் பசுமையான வாழ்வை பறை சாற்றும் வகையில் மாணவர்களினால் அழகிய பாடல் மற்றும் நடனம் என்பவை அரங்கேற்றப்பட்டதுடன், அரசாங்க அதிபரினால் பசுமையை பறைசாற்றும் வகையில் கேக் வெட்டப்பட்டதுடன், இதன் போது மாவட்ட அரசாங்க அதிபருக்கு பாலர் பாடசாலை நிருவாகத்தினரால் பென்னாடை பேர்த்தி மலர் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.






