WhatsApp Image 2025 08 22 at 09.52.39 1

பங்குச்சந்தை CSE Mobile App பயன்பாடு தொடர்பாக மாவட்ட செயலக உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் செயலமர்வொன்று இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாவட்ட செயலாளர் மாநாட்டு மண்டபத்தில் 21.08.2025 ம் திகதி இடம் பெற்ற நிகழ்வு கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிறுவனத்தின் மட்டக்களப்பு கிளையின் அதிகாரி எம்.ஜே.எம்.அலீமுடீன் தலைமையில் மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் கே.மதிவண்ணன் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.

குறித்த தெளிவூட்டல் செயலமர்வினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்துவைத்தார். குறித்த செயலமர்வின் போது பங்கு பரிவர்த்தனை பங்குச் சந்தை என்றால் என்ன? அங்கீகரிக்கப்பட்ட பங்கு பரிவர்த்தனையினை எப்படி இணங்காண்பது, மூலதன இலாபம் என்றால் என்ன?இ பங்கு இலாபம் என்றால் என்ன?, நிதி சார் கல்வி அறிவினை மேம்படுத்துவது தொடர்பாகவும், பாதுகாப்பான முறையில் எவ்வாறு பங்குச் சந்தை நடைமுறையினை கையாள்வது, இலங்கையில் ஏற்படும் பணவீக்கத்தினால் எற்படும் சாதக பாதக தன்மை, அங்கீகரிக்கப்படாத நிதி செயற்பாடுகளால் ஏற்படும் தீமைகள், சேமிப்பு மற்றும் முதலீடுகள், பாதுகாப்பு, செலவு, திரவத்தன்மை, இடர்நேர்க்கை, வெகுமதிகள், வரி மற்றும் வயது தொடர்பாகவும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

குறித்த செயலமர்வில் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்ஜனி முகுந்தன், மாவட்ட செயலக நிறைவேற்றுத் தர உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என அதிகளவிலானோர் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தனர்.

WhatsApp Image 2025 08 22 at 09.52.39 1 WhatsApp Image 2025 08 22 at 09.52.39 WhatsApp Image 2025 08 22 at 09.52.38 3 WhatsApp Image 2025 08 22 at 09.52.38