WhatsApp Image 2025 08 21 at 10.23.28

வாழும் கலை அமைப்பின் தலைமைத்துவப் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. வாழும் கலை அமைப்பின் தலைமைத்துவப் பயிற்சியை நிறைவு செய்த 14 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்றது.

வாழும் கலை அமைப்பின் தலைவர் கந்தவேல் அருள்நிதி தலைமையில் இடம் பெற்ற கௌரவிப்பு நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் குறித்த நிகழ்விற்கு விசேட அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் ஜீ.பிரணவன் கலந்து சிறப்பித்தார்.

குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து வாழுங்கலை அமைப்பின் வளர்ச்சிக்கு பங்காற்றிய பயிற்றுவிப்பாளர்கள், உத்தியோகத்தர்கள் என பலர் கௌரவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து  தலைமைத்துவப் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்கள் அதிதிகளினால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.குறித்த கலந்துரையாடலில் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ஜீ.பிரணவன், பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வரன், மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எல்.எம்.ஜமீல் உள்ளிட்ட மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் துறைசார்  திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 08 21 at 10.23.28 WhatsApp Image 2025 08 21 at 10.23.26 WhatsApp Image 2025 08 21 at 10.23.27 WhatsApp Image 2025 08 21 at 10.25.09 1