மட்டக்களப்பு மாவட்டத்தில் உயரதிகாரிகளுக்கான தேசிய வேலைத்திட்டமான இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் விழிப்புணர்வு கருத்தரங்கு 25.10.2019 காலை மு.ப 9.30 மணிக்கு மண்முனை வடக்கு பிரதேச செயலக "டேபா" மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிகழ்வினை நடாத்துவதற்கு இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் உப பொலிஸ் பரிசோதகர் திரு.காரியப்பர் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கினார். இவ் விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திரு.க.ஜெகதீஸ்வரன், மற்றும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திருமதி.நவரூபரஞ்சனி முகுந்தன், உதவி மாவட்ட செயலாளர் திரு.ஏ.நவேஸ்வரன், மற்றும் பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கையில் முதல் முதலாக 1954 ஆம் ஆண்டு இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டு இலஞ்சம் ஊழல் சம்பந்தமான சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இயற்றப்பட்டு நடைமுறையிலிருந்து வந்துள்ளது. இச்சட்டமானது காலத்திற்கு காலம் சிறு மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் குறிப்பிடுகையில் உண்மையாகவே ஒரு நாடு ஊழலற்ற நாடு என்பது அரச அலுவலர்களின் நேர்மைத்தன்மையான செயற்பாட்டின் மூலமே கணிப்பீடு செய்யப்படுகின்றதாக சிங்கப்பூரின் தந்தை லீக்குவாங்யூ குறிப்பிட்டதாக தெரிவித்தார். பொதுத்துறையில் தேசிய ரீதியாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வுகளை சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்துவதற்காக 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி தேசிய செயற்றிட்டம் வகுக்கப்பட்டு 2019 ஆண்டு தொடக்கம் 2021 ஆண்டு வரைக்கும் அரசாங்கம் செயற்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் உப பொலிஸ் பரிசோதகர் குறிப்பிடுகையில் அதிக படியான முறைப்பாடுகள் அரசாங்க ஒப்பந்தங்கள் வழங்கப்படும் போதும், பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் சார்பான முறைப்பாடுகள் அத்துடன் காணி தொடர்பான பிணக்கு, இலஞ்சம் கோரப்படுவதற்கான முறைப்பாடுகள் மற்றும் அரச தொழில் பெறுவதற்கான இலஞ்சம் கோரப்படுவதற்கான முறைப்படுகள் தான் அதிகமாக பதிவாகி வருகின்றது எனக் குறிப்பிட்டார்.

DSC 1021DSC 1001DSC 1011DSC 1012DSC 1008DSC 1020