
"சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத்தின் மூலம் ஒரு பசுமையான தொழில் முனைவோரை உருவாக்குவோம்" எனும் தேசிய செயல் திட்டம் தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் மாவட்ட உற்பத்தித்திறன் இணைப்பாளர் இ.புவனேந்திரன் ஏற்பாட்டில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 12.03.2026 அன்று இடம் பெற்றது.
"கிளின் ஸ்ரீலங்கா " தேசியற்திட்டத்தின் மூலம் நெறிமுறைக் கொள்கைகள், தூய்மையான பௌதீக சூழல் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான நாடு தழுவிய ரீதியில் பல வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எதிர் வரும் தினங்களில்சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத்தின் மூலம் ஒரு பசுமையான தொழில் முனைவோரை உருவாக்குவோம் எனும் தேசிய செயற்திட்டம் மாவட்டத்தில் இடம் பெறவுள்ளது.
கிராம மக்களின் பங்களிப்புடன் சிரமதான நிகழ்வுகள், பொது இடங்களை தூய்மை செய்தல் போன்ற பல்வேறு செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
மேலும் சமூகத்தின் உற்பத்தித்திறனை அபிவிருத்தி செய்யவும், அதன் மூலம் எமது நாட்டின் வளர்ச்சி இலக்குகளை அடைய இத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகலில் கிளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் மாவட்ட இணைப்பாளர் பேபியன் பாத்திலட், மாவட்ட உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆர். புவனேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






