1

மட்டக்களப்பு மாவட்டத்தின்  தேசத்தை கட்டி எழுப்புகின்ற  வளமான கிராமம் சமூக உற்பத்தித்திறனுக்கான மாதிரி கிராமங்களின் அங்குரார்ப்பண நிகழ்வு மடடக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட சத்துருக்கொண்டான் லங்காபுரக்கிராமத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்தினம் தலைமையில் 16.03.2026 அன்று இடம் பெற்றது.

இந்நிகழ்வில்  மட்டக்களப்பு  மாவட்ட அரசாங்க அதிபர் ஜே .எஸ் அருள்ராஜ் மற்றும் மட்டக்களப்பு பாராளுமன்ற  உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான கந்தசாமி பிரபு  அவர்களும் கலந்து கொண்டனர் சமூக உற்பத்தித்திறனுக்கான மாதிரி கிராம திட்டமானது ஜனாதிபதி செயலகத்தின்  கிளீன் சிறீலங்கா செயலகம், கைத்தொழில் மற்றும் தேசிய உற்பத்தித்திறன் செயலகம் ஆகியவற்றின் ஒன்றிணைந்த திட்டமாகும்

இத்திட்டமானது  ஒரு பிரதேச செயலக பிரிவிலிருந்து ஒரு கிராமத்தை தெரிவு செய்து அக்கிராமத்தில் இருந்து 50 குடும்பங்களை மாத்திரம் தெரிவு செய்து அக்கிராம மக்களின் அபிலாசைகளை வகைப்படுத்தி அழகான வாழ்க்கையை அடையும் நோக்குடன்  "உற்பத்தித்திறன் நிறைந்த வளமான கிராமம்"  எனும் ஊக்குவிக்கும் திட்டம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இவ் ஊக்குவிப்பு திட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேசசெயலகத்திக்குட்பட்ட பின்தங்கிய வசதிகள் குறைந்த கிராமங்களில் சத்துருக்கொண்டான் லங்காபுரக்கிராமம் தெரிவுசெய்யப்பட்டு  இந்நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உற்பத்தித்திறன்  உத்தியோகத்தர்கள், கிராம சேவகர், அரச அதிகாரிகள், பொது மக்கள் என  பலர்  கலந்துகொண்டனர்

1 2 3