மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரிய கல்லாறு பிரிவிற்க்கான பிறப்பு இறப்பு பதிவாளர் பிரிவிற்கும் மண்முனை தென் எருவில் பற்று பிரிவிற்குமான பொது விவாக பதிவாளர் பிரிவிற்கான பிரதேச பதிவாளரும், மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு (வவுணதீவு) பிரதேச செயலகப் பிரிவின் மகிழவட்டவான், பிரிவிற்கான பிறப்பு இறப்பு பதிவாளர் பிரிவிற்கும் வவுணதீவு பொது விவாக பதிவாளர் பிரிவிற்குமான பிரதேச பதிவாளரும் இன்றைய தினம் (03) திகதி முதல் பதிவாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மேலதிக பதிவாளர் நாயகமுமான ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதிப் பதிவாளர் நாயகமான க.நடராசா அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






