1மட்டக்களப்பு மாவட்டத்தில்  பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ்  நிர்மாணிக்கப்படவுள்ள  நெல் உலர்த்தும் இயந்திரம் தொடர்பான கலந்துரையால் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்  அவர்கள் ஏற்பாட்டில் (06.07.2026) பழைய மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.


கடந்த காலங்களில்   மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மழை வெள்ளங்களினால் நெல்லினை உலர்த்த முடியாது பாரிய பிரச்சினையை எதிர் நோக்கியிருந்தனர்.

 இதனை அவதானித்த  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி பிரபு அவர்கள் பிரஜா சக்தி திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர்  பிரிவுகளில் நெல்லினை உலர்த்தும் பாரிய இயந்திரங்களை நிர்மாணிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

இதனை முன்னிட்டு இயந்திரங்களினை நிறுவுவதற்கான பொருத்தமான இடம், இயந்தரங்களின் தரம் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பாக உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையால் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம பொறியியலாளர் ரீ.சுமன், திட்டமிடல் பணிப்பாளர் வி. நவநிதன் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கடந்த காலங்களில்  நெல் உலர்த்த முடியாது குறைந்த விலையிற்கு நெல்லினை விவசாயிகள் விற்பனை மேற்கொண்டு நஷ்டம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

1 2 3