மட்டக்களப்பு மாவட்ட செயலக காணிப் பிரிவின் தலைமைக் காணி உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த திருமதி குகதா ஈஸ்பரன் பதவியுயர்வு பெற்று செல்கின்றமையினை யிட்டு அவரை பாராட்டி கெளரவிக்கும் பிரியாவிடை நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் காணிப் பிரிவில் கடந்த 18 வருடங்களாக தலைமைக் காணி உத்தியோகத்தராக தமது கடமையினை மிகவும் திறம்பட ஆற்றிவந்த நிலையில் கிழக்கு மாகாண காணி திணைக்களத்தின் உதவி காணி ஆணையாளராக பதிவியுயர்வு பெற்று செல்வதனையிட்டு பாராட்டி கௌரவிப்பதுடன், பிரியா விடை நிகழ்வும் (07) திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பதிவிநிலை உத்தியோகத்தர்களால் மாவட்ட செயலகத்தின் காணிப் பிரிவில் இவர் கடமையாற்றியமையினை பாராட்டி உரையாற்றியதுடன், பொன்னாடை போர்த்தி கௌரவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.