மட்டக்களப்பு மாவட்ட கலாசார அதிகாரசபையின் புதிய நிர்வாக சபையினை தெரிவு செய்யும் கூட்டம் கடந்த 30.10.2019 பி.ப 3.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு உதவி மாவட்ட செயலாளர் திரு.ஏ.நவேஸ்வரன், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், இஸ்லாமிய கலாசார உத்தியோகத்தர் திரு.செயினுஸ் ஆப்தின் மற்றும் கலாசார திணைக்களத்தின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமார் அவர்கள் உரையாற்றுகையில் இந்த மாவட்டமானது பல்லின கலாச்சாரத்திணை கொண்ட மாவட்டமாகும். அந்த வகையில் நல்லதொரு கலாசார விழுமியங்களுக்கூடாக நல்லினக்கத்தினை கட்டியெழுப்பும் வகையில் இந்த மாவட்ட கலாசார சபை ஆக்கப்பட்டு சிறந்த கலாசார சமூகத்தினை கட்டியெழுப்புதல் வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிர்வாகமானது மூன்று ஆண்டு கால ஆயுளைக்கொண்டிருக்கும். இதன் நிறைவேற்றுப்பணிப்பாளர் சபையின் தலைவராக பதவி வழியாக அரசாங்க அதிபர் இருப்பதுடன் உபதலைவராக திரு.ச.கனேசமூர்த்தி, செயலாளராக திரு.வை.லோகிதராஜா, பொருளாளராக திரு.ந.துஜோகாந் ஆகியோர் ஏகமனதாக எவ்வித போட்டியும் இன்றி மாவட்ட கலாசார அதிகார சபையின் நிர்வாக உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.
முன்பு இருந்த கலாசார அதிகார சபையானது 2016ம் ஆண்டு தெரிவானது அச்சபையின் பதவிக்காலம் முடிவுற்றதை தொடர்ந்து புதிய நிர்வாக சபையினை உருவாக்கி சிறப்பான கலாசார சேவையினை வழங்குவதற்கு ஏதுவான உறுப்பினர்கள் தெரிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.












