மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 31.10.2019 மற்றும் 01.11.2019 தபால் மூலமான வாக்களிப்பு நடைபெற்றது. இக்கடமையில் 32 உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் கடமையில் ஈடுபட்டு 154 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் வாக்களித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க 11,983 வாக்காளர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 461 பேருடைய வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன. அதற்கமைய 11,522 பேர் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர். 31.10.2019 மற்றும் 01.11.2019 ஆம் திகதிகளில் வாக்களிக்க தவறுகின்ற அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 7ம் திகதி காலை 8.45 முதல் பிற்பகல் 4.15 வரைக்கும் உள்ள காலப்பகுதியில் மட்டக்களப்பு உதவித்தேர்தல் ஆணையாளர் அலுவலகத்திற்குச்சென்று நேரடியாக வாக்களிக்க முடியுமென மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி திரு.மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
மாவட்டத்தில் 154 வாக்கெடுப்பு நிலையங்களை கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதற்கு 32 உதவி தெரிவத்தாட்சி அதிகாரிகள் செயற்பட்டு வருகின்றனர். இவர்களின் கடமைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் முகமாக பொலிஸ் பிரிவினரால் ரோந்து நடவடிக்கையும், காவல் நடவடிக்கையும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவத்தாட்சி அதிகாரி திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தெரிவித்தார்.












