மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் திணைக்கள முறைப்பாட்டு பிரிவுக்கு இதுவரை 28 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தேர்தல் திணைக்களத்தினால் மாவட்ட மட்டத்தில் உருவாக்கப்பட்ட முறைப்பாட்டு பிரிவுக்கு இதுவரை 28 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளது. இவற்றுள் பாரதூரமான முறைப்பாடுகள் இதுவரை பதிவாகவில்லை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 16 முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது. ஏனையவற்றுக்கான தீர்வுகளும் மிகவிரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் பொலிசாருடனும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களுடனும் இணைந்து அவற்றிற்கும் விரைவான தீர்வை பெற்று கொடுக்கப்படும் என தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்தார்.