மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐனாதிபதி தேர்தலுக்கான பிரதான வாக்கெண்ணும் நிலையமாக செயற்படவிருக்கும் மட்டக்களப்பு இந்து கல்லூரி வளாகத்தின் இறுதிக்கட்ட ஏற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்காக தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் கலந்து கொண்டு நிலமைகளை கண்டறிந்தார்.
இதன்போது வாக்கெண்ணும் பிரதான வாக்கெடுப்பு நிலையத்தில் நிறுவபட்டுள்ள சகல செயற்பாடுகளின் இறுதிகட்ட பணிகளை அவதானித்து பூர்த்தி செய்யப்படாது இருக்கு மேலதிக பணிகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளை குறிப்பிட்ட பிரிவினருக்கு வழங்கினார்.
இதன் போது உதவித்தேர்தல் ஆணையாளர் திரு.சசீலன் உட்பட சகல பிரிவினருக்குமான உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களும் கலந்து கொண்டனர். இதே வேளை இந்த தேர்தலுக்கு போக்குவரத்து நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படவிருக்கும் மட்டக்களப்பு மற்றும் வெளிமாவட்டத்திலிருந்து தருவிக்கப்பட்ட சகல வாகனங்களும் இந்து கல்லூரி மைதான வளாகத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.













