ஐனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. மட்டக்களப்பில் 428 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய வாக்குப்பெட்டிகளை வழங்கப்பட்டுள்ளது.
வாக்களிப்பு நிலையங்களுக்கான உத்தியோகத்தர்கள் தங்களின் கடமைகளை பொறுப்பேற்றுகொண்டனர். இதனை மேற்பார்வை செய்கின்ற உத்தியோகத்தர்களும் தங்களின் கடமைகளை ஆரம்பித்துள்ளனர்.
வழங்கள் நடவடிக்கைகள் தெரிவத்தாட்சி அலுவலர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் மற்றும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர் திரு.ஆர்.சசீலன் உட்பட அதிகாரிகள் கண்கானித்து வருகின்றனர்.
நாளை நடை பெறவுள்ள தேர்தலுக்கான சகலவிதமான ஏற்பாடுகளும் திருப்திகரமான முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலகர் திரு.மா.உதயகுமார்அவர்கள் தெரிவித்தார்.











