மட்டக்களப்பு மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களில் பணிபுரிகின்ற வாகன சாரதிகளுக்கான திறன் பயிற்சி கருத்தரங்கு 26.11.2019 காலை 9.30 மணியளவில் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இப்பயிற்சி கருத்தரங்கிற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மட்டக்களப்பு மோட்டார் வாகன பரிசோதகர் திரு.டி.சிவயோகன் வளவாளராக கலந்து கொண்டு சாரதிகளின் திறன்களை மேன்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு கருத்துரைகள் வழங்கப்பட்டது. இதனோடு மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸ் திணைக்களமும் இணைந்து வாகன சாரதிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் சட்டதிட்டங்கள் தொடர்பாகவும் அதனோடு அரசாங்க திணைக்கள அதிகாரங்களுடன் செல்கின்ற போது மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துவது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

விபத்துக்களில் இருந்து எவ்வாறு தவிர்துக்கொள்வது அரசாங்க வாகனம் விபத்துக்குள்ளானால் எவ்வாறான நடைமுறைகளை பின்பற்றுவது என பல திறன் சார் மேம்படுத்துகையினை காலத்திற்கு காலம் செயற்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மோட்டார் வாகன பரிசோதகர்களால் அரசாங்க திணைக்களங்களின் வாகனங்கள் பராமரிக்கும் முறைகள் அதற்காக குறித்த காலத்தில் உரிய வாகன பராமரிப்பு நிலையங்களில் செய்ய வேண்டிய அவசியம் என்பனவைகளும் தெளிவூட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.