மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்புத்தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் கடந்த நவம்பர் 15ம் திகதிதொடக்கம் 22 திகதி வரையும் 100 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2019ம் ஆண்டு ஐனவரி 1ம் திகதியில் இருந்து இதுவரை 1,519 பேர் டெங்குத் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர். இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் அதிகமாக பாதிப்புக்குள்ளான மட்டக்களப்பு பிரிவில் இதுவரை 39 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அது போன்று ஆரையம்பதி 14 பேர், களுவாஞ்சிகுடி 07 பேர் செங்கலடி, வவுனதீவு ஆகிய பகுதியில் தலா 10 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

மொத்தமாக கடந்த வாரம் 100 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மட்டக்களப்பு மக்கள் சற்றுவிழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள், நீர்தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்குநுளம்புகள் பெருவதற்கு இடம் கொடுக்காதவகையில் துப்பரவாக வைத்துகொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்கு கட்டுப்பாடு பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி டாக்டர்.வே.குணராஜசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.