வெள்ள அனர்த்தினால் பாதிப்புக்குள்ளான மட்டக்களப்பு மாவட்ட மக்களை பார்வையிடுவதற்கான மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ எஸ்.வியாழேந்திரன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார், அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் திரு.எ.எஸ்.எம் சியாத் மற்றும் பிரதேச செயலாளர்கள் வெள்ள அனர்த்தினால் பாதிப்புள்ளாகி இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களை பார்வையிட்டிருந்தனர்.

முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் உபகரணங்கள் போன்றவற்றினை வருகைதந்த அதிகாரியிடம் கோரியிருந்தனர். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவு, குடிநீர் என்பன தொடர்ச்சியாக ஏழு நாட்களாக வழங்கப்பட்டு வருவதாகவும் அதில் மருந்து ஏற்பாடுகள், மலசல கூட ஏற்பாடுகள் என்பன உடனடியாக ஒழுங்கு செய்து கொடுப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.