மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவிற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையிலான அதிகாரிகள் குழு வெள்ள அனர்த்தத்தை பார்வையிடுவதற்காக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் திரு.ஏ.சி.எம்.சியாத் அவர்களுடன் வேற்றுச்சேனை கிராம சேவகர் பிரிவினை விசேடமாக பார்வையிட்டனர்.

வெள்ள அனர்த்தத்தின் போது வேற்றுச்சேனை கிராமமானது கடுமையான வெள்ளப்பாதிப்பினை எதிர்கொண்ட பிரதேசமாகையால் அங்கு வயல் நிலங்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கப்பட்டதையும் அங்கு வாழ்கின்ற மக்கள் அரச அதிபரிடம் முறையிட்டனர். அண்ணளவாக 346 ஏக்கர் வயல் நிலங்கள் அழிவுற்றுக்காணப்படுவதையும் அங்கு செய்யப்பட்ட சேனைப் பயிற்செய்கைளும் அழிவடைந்த நிலையிலே காணப்பட்டது.

அப்பிரதேசத்தில் வசிக்கின்ற மக்களின் பிரதான தொழிலாகிய விவசாயம், கால் நடை வளர்ப்பு ஆகிய 2 பிரதான தொழில்களுமே அதிகமாய் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த வகையிலே பாதிக்கப்பட்ட விவசாய கால்நடை பண்ணையாளர்களுக்கு அரசினால் நிவாரணம் அல்லது நஷ்ட ஈடுகள் வழங்குவதற்கு மக்கள் அரச அதிபரை கோரியிருந்தனர்.

DSC 0022 resized   DSC 0990 resized   DSC 0993 resized   DSC 1016 resized