DSC 0280 resizedகிழக்கு மாகாண ஆளுநர் திருமதி.அனுராதா ஜகம்பத் 25.12.2019 அன்று மட்டக்களப்பு மாவட்டத்துக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீரற்ற காலநிலையால் இம்மாவட்டத்தில் வெள்ளஅனர்த்தத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் நிவாரண நடவடிக்கைகள் பற்றியும் கண்டறிந்ததுடன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆராய்ந்தார்.

மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் வேண்டுகோளையேற்று இம்மாட்டத்துக்கு வருகைதந்த கிழக்கு ஆளுநர் அனுராதா முதலில் சித்தாண்டி பிரதேசத்துக்கு வருகைதந்து வெள்ள நிலமைகளைஅவதானித்த பின்னர் சித்தாண்டி வித்தியாலயத்தில் வெள்ளஅனர்த்தத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நிதிஒதுக்கீட்டில் தயார்செய்யப்பட்ட உலருணவு மற்றும் ஆளுநர் நிதியில் சிறுவர்க்கான பால்மா அடங்கிய நிவாரண பொதிகளை வழங்கி வைத்தார்.

இதன் பின்னர் வெள்ளஅனர்த்தத்தில் ஒவ்வொரு வருடமும் நீர்ப்பெருக்கால் பல கிராம மக்களின் போக்குவரத்து தடைப்படும் கிரான் பாலத்தின் தற்போதைய நிலைமைகள், மக்களின் போக்குவரத்துக்கள் பற்றியும் நேரில் கண்டறிந்ததுடன் இப்பாலத்தின் போக்குவரத்து தடைப்படுவதால் மக்கள் அனுபவிக்கும் துயரங்கள் பற்றி மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் ஆளுநருக்கு எடுத்துக்கூறினார்.

இதனைகேட்டறிந்த ஆளுநர் போக்குவரத்துக்கு சீராக இப்பாலத்தை அபிவிருத்திசெய்ய அரசின் கவனத்துக்கு கொண்டுவந்து நடவடிக்கை எடுக்கப்படுமென்று அரசாங்க அதிபரிடம் உறுதியளித்தார்.இதன் பின்னர் கோரளைப்பற்று மேற்கு செயலகப்பிரிவின் காவத்தமுனை பகுதியில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நிதிஒதுக்கீட்டில் தயார்செய்யப்பட்ட உலருணவு மற்றும் ஆளுநர் நிதியிலான சிறுவர்க்கான பால்மா அடங்கிய நிவாரண பொதிகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திரு கே.ஜெகதீஸ்வரன்,மாவட்ட அனர்த்த முகாமைத்துவநிலைய உதவிப்பணிப்பாளர் திரு ஏ.சி.எம்.சியாத், கணக்காளர் திரு கே.பிரேம்குமார், கோரளைபற்று மத்தி பிரதேச செயலாளர் திரு எஸ்.எச்.முசம்மில், ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் திரு கே..வில்வரத்தினம், கிரான் பிரதேச செயலாளர் திரு ராஜ்பாபு,ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி நிகாராமௌஜூத், நிர்வாக உத்தியோகத்தர் திரு எஸ்.தயாபரன் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

DSC 0280 resizedDSC 0283 resizedDSC 0290 resizedDSC 0313 resizedDSC 0325 resizedDSC 0330 resizedDSC 0350 resizedDSC 0378 resizedDSC 0386 resizedDSC 0402 resizedDSC 0412 resizedDSC 0422 resized