DSC 0631 reசீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அரச அரசசார்பற்ற நிறுவனங்களால் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்ப்பற்றுப்பிரதேச செயலகப்பிரிவில் சித்தாண்டி -02 கிராமத்திற்குட்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 257 குடும்பங்களுக்கான நிவாரணப்பொருட்களை சித்தாண்டி மத்திய மகாவித்தியாலயத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் உலர் உணவுப்பொருட்களை 26.12.2019 அன்று வழங்கி வைத்தார்.

சுவிஸ் "முனைப்பு" நிறுவனத்தின் அனுசரனையில் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் வேண்டுகோளின் பேரில் ஒரு தொகுதி உலர் உணவுப்பொருட்கள் இக்கிராம மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது ஏறாவூர்பற்றுப்பிரதேச செயலாளர் திரு.ந.வில்வரட்ணம், சுவிஸ் முனைப்பு நிறுவனத்தின் தலைவர் திரு.ம.சசிகுமார், செயலாளர் திரு.எஸ்.தயாபரன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

DSC 0631 reDSC 0612 reDSC 0619 reDSC 0628 reDSC 0643 reDSC 0644 reDSC 0645 reDSC 0633 reDSC 0652 reDSC 0665 reDSC 0675 reDSC 0685 reDSC 0691 re