
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருகின்ற மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
ஏறாவூர் பிரதேச செயலகப்பிரிவில் மிச்நகர், மீராகேணி, ஜயங்கேணி ஆகிய கிராமங்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு அக்கிராமத்தில் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற வறுமை நிலையிலுள்ள 62 குடும்பங்களுக்கு பாம் பவுன்டேசன் நிறுவனத்தின் அனுசரணையில் தலா 2500 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் 28.12.2019 அன்று ஏறாவூர் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இதன் போது ஏறாவூர் பிரதேச செயலாளர் திரு.எஸ்.எம். அல் அமீன், பாம் பவுன்டேசன் நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. வ.ரமேஸ் ஆனந்தன், பாம் பவுன்டேசன் நிறுவனத்தின் கணக்காளர் திருமதி.பிரியதர்சினி ஏறாவூர் கிராம சேவகர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.









