DSC 0095 resized

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் பெய்த மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தில் அதிகளவான மக்கள்  பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கான நிவாரணப்பணியினை அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் நாவலடி, திருச்சந்தூர், கல்லடி முகத்துவாரம் ஆகிய கிராமங்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு அக்கிராமங்களில் கடற்தொழிலில் ஈடுபடுகின்ற  வறுமை நிலையிலுள்ள  239 குடும்பங்களுக்கு புனித மிக்கல் கல்லூரியின் பழைய மாணவர்களும், டான் நியூஸ் குழுவினர் மற்றும் வேட்டையன் திரைப்படக்குழுவினர் இணைந்து அவர்களின் நிதி அனுசரணையில் உலர்உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு  மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மாணிக்கம் உதயகுமார் அவர்கள் தலைமையில் 30.12.2019 அன்று  நாவலடி கிராம சேவகர் அலுவலகத்தில் இடம் பெற்றது.

இதன் போது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு. எஸ்.வாசுதேவன், திரு. சில்வஸ்டர் , டான் நியூஸ் குழுவினர்கள், கிராம சேவகர்கள்  மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

DSC 0088 resizedDSC 0086 resizedDSC 0083 resizedDSC 0089 resizedDSC 0092 resizedDSC 0115 resizedDSC 0095 resizedDSC 0111 resizedDSC 0119 resizedDSC 0123 resizedDSC 0132 resizedDSC 0143 resizedDSC 0145 resized