
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 2020ம் ஆண்டு ஐனவரி 1ம் திகதி அரச பணியாளர்கள் கடமைகளைத் தொடங்கும் முன்னர் தேசிய கொடியினை ஏற்றி தேசியகீதம் இசைக்கப்பட்டு அரசாங்க சேவை சத்தியபிரமான உறுதிமொழியினையும் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர்கள், உதவி மாவட்ட செயலாளர், பிரதமகணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த அரசாங்க அதிபர் சகல உத்தியோகத்தர்களும் வினைத்திறன் மிக்க பேண்தகு சேவையினை பயன்மிக்கதாகவும் அர்ப்பணிப்புடனும் நேர்மையாகவும் மக்களுக்கு பக்கசார்பின்றிய சேவையினை நிறைவேற்ற வேண்டும் எனவும் இம் மலர்ந்திருக்கும் புத்தாண்டில் சகல உத்தியோகத்தர்களும் சாந்தியும் சமாதானமும் மகிழ்ச்சிகரமான ஆண்டாக மலர வாழ்த்துக்கள் கூறியதுடன் கடந்த ஆண்டு இம்மாவட்டத்திற்கு சிறந்தசேவையினை வழங்கிய அனைத்து அரச உத்தியோகத்தர்களையும் பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மாவட்டத்தின் சகல துறைகளிலுமே மாவட்டசெயலகம் சாதனைகளை படைத்திருந்தமையும் இந்த இடத்தில் குறிப்பிட்டு ஆகவேண்டும் என்றும் மலர்ந்து இருக்கும் இப்புத்தாண்டில் கடந்த ஆண்டைவிட இவ் ஆண்டில் அதிகசாதனைகளை படைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.














