DSC 0810 resizedமட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிதாக கடமையினை பொறுப்பேற்ற அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் ஜாமி உஸ் ஸலாம் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தினரை சந்தித்து ஆசியும் பெற்றுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து அங்கு, அரசாங்க அதிபர், பள்ளிவாயல் நிர்வாகத்தினருக்கு நன்றியை கூறியதுடன் மட்டக்களப்பு மாவட்டமானது பல்லின சமூகம் வாழ்கின்ற ஒரு மாவட்டமாக திகழ்ந்து வருவதும் அவர்களிடையே ஒற்றுமையினையும் நல்லுறவையும் இறுக்கமாக பேணுவதற்கு தன்னாலான முழு முயற்சியினை வழங்குவதாகவும் இனங்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள், கசப்புணர்வுகள், ஏற்படாத வகையில் தனது பணியினை பாகுபாடின்றி சகலருக்கும் ஒரே விதமாக ஆற்றுவதில் பின் நிற்க மாட்டேன் எனவும் குறிப்பிட்டார்.

தன்னுடைய நிர்வாக சேவை இறுதிக் காலத்தில் தான் பிறந்த மண்ணான மட்டக்களப்பிற்கு சேவை ஆற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் தனது முழுமையான அர்ப்பணிப்புடன் மக்களுக்கு முடியுமான உதவிகளை சமூக பாரபட்சமின்றி செய்வதில் ஒரு போதும் பின் நிற்க மாட்டேன் என்றும் இந்த நீண்ட வரலாறு கொண்ட பள்ளிவாயலுக்கு தான் வந்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டார்.

DSC 0804 resized DSC 0808 resized DSC 0809 resized DSC 0810 resized DSC 0812 resizedDSC 0817 resizedDSC 0836 resizedDSC 0836 resizedDSC 0847 resized

DSC 0848 resized