மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா 01.02.2020 அன்று மட்டக்களப்பு மறைமாவட்ட குரு முதல்வர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை அவர்களை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து உரையாற்றிய மறை மாவட்ட குரு முதல்வர், அரசாங்க அதிபருக்கு மாவட்டத்தின் சகல வழிகளிலும் தான் ஒத்தாசையாக இருந்து உதவி புரியவுள்ளதாகவும் குறிப்பிட்டார். அதே வேளை அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கையில் சாதி மத பேதங்களுக்கு அப்பால் மாவட்டத்தில் சகலருக்கும் சமமான சேவையினை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கை நிர்வாக சேவையில் 29வருட அனுபவம் வாய்ந்தவரும் மட்டக்கப்பு மாவட்டத்தினை தனது சொந்த மாவட்டமாகக் கொன்டவருமான அரசாங்க அதிபர் மாவட்டத்தின் அபிவிருயித்தியின் பால் பற்றுடன் செயல்பட வேண்டும் என மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஆசி வழங்கினார்.










