
கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ அனுராதா யஹம்பத் தனது பணியாட்கள் தொகுதியினருடன் 26.02.2020 புதன்கிழமை அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள ஆளுநரின் மக்கள் பணிக்காரியாலயத்தில் பொதுமக்களை சந்தித்தார்.
பொதுமக்களின் காலடிக்கு வந்து குறைபாடுகளை ஆராய்ந்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்குடன் மாதாந்தம் கிழக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இம்மக்கள் சந்திப்பு நடைபெற்று வருகின்றது. இதனடிப்படையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.
மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் இருந்து வருகை தந்த பொதுமக்கள் தமது குறைகளையும், பிரச்சினைகளையும் முன்வைத்து அதற்கான தீர்வுகளைப் பெற்று திருப்தியோடு செல்வதைக் காணக்கூடியதாக இருந்தது.






