
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின விழா பெருமளவு மகளிர் அமைப்புக்களின் பங்களிப்புடன் 11.03.2020 மாலை வெகு விமர்சையாக இடம்பெற்றது. பிரதேச செயலாளர் திரு வீ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இவ்விழாவினையொட்டி மாதர்களின் உற்பத்திப் பொருள் கண்காட்சியும் பிரதேசசெயலக வளாகத்தில் இடம்பெற்றதுடன் பெண்களின் எழிச்சி தொடர்பான கலாசார நிகழ்வுகளும்இடம்பெற்றன. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் பொதுப்பணிகளை பாராட்டி அவருக்கு பொன்னாடை போர்த்தியும் விருதுகள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டது. இங்கு அரசாங்க அதிபர் கருத்து வெளியிடுகையில் இந்த நாட்டில் பெண்கள் பலதுறைகளிலும் சாதனை படைத்தாலும் இன்னும் பெண் விகிதாசாரத்துக்கேற்ப அரசியலில் ஈடுபாடு காட்டவில்லை எதிர் காலத்தில் பெண்கள் அரசியல் துறையிலும் ஈடுபாடுகாட்ட முயற்சிக்க வேண்டும் என தெரிவித்தார்.







