DSC 0521 resized

உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதன் பரவலைத் தடுப்பதற்காக தொற்று நீக்கி விசிறல் நடவடிக்கை மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டது.

 

அரச நிறுவனங்களில் காணப்படுகின்ற மக்கள் கைகளால் தொட்டுப் பயன்படுத்தக்கூடிய இடங்கள், பொருட்கள், அரச வாகனங்கள் மற்றும் பொது இடங்கள் போன்றவற்றில் இந்த தொற்று நீக்கி விசிறல் நடவடிக்கை மட்டக்களப்பு மாநகரசபை உதவி மேயர் திரு கே. சத்தியசீலன் மேற்பார்வையில் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.மட்டக்களப்பு மாவட்டசெயலகத்திலும் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

DSC 0519 resized DSC 0523 resized DSC 0520 resized DSC 0528 resized