DSC 0794 resized

கொரோனா வைரஸ் பரவுவதனை தடுக்க அரசாங்கத்தால்  ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதால்  மட்டக்களப்பு மாவட்டத்தில்  வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நாளாந்தம் கூலி வேலை செய்யும் கூலி வேலை யாளர்களின் குடும் பங்களுக்கு இலவசமாக உணவுப்பொருள்களடங்கிய தலா ஆயிரம் ரூபா பெறுமதியான சுமார் 250  மட்டக்களப்பு ஜாமியுஸ் ஸலாம் ஜும்மா பள்ளிவாயல்  ஊடாக  வழங்க மட்டக்களப்பு முஸ்லீம் வர்த்தகர் நலன்புரி அமைப்பு முன்வந்துள்ளது.

சுமார் மூன்று இலட்சம் பெறுமதியான இந்த அன்பளிப்பு உணவுப்பொதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் மாவட்ட செயலகத்தில் வைத்து 30.03.2020 அன்று  பொறுப்பேற்றுக்கொண்டார்.இந்த நிவாரண பொருட்களை வெல்லாவெளி ,கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு விநியோகிக்க அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா உத்தரவினை பிறப்பித்துள்ளார்.இந்நிவாரணப்பொருட்கள் இப்பகுதி பிரதேச செயலாளர்களால் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர குறித்த முஸ்லீம் வர்த்தகர்நலன்புரி அமைப்பு கோட்டமுனை பகுதி மக்களுக்கு விநியோகிக்க 30 உணவுப்பொருட்களடங்கிய பொதிகள் கோட்டை முனை யூஸுபிய்யா முஸ்லீம் பள்ளிவாசல்  நிருவாகத்தினரிடம் ஒப்படைத்துள்ளது. இதேவேளை இந்நிருவாகம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா விசேட சிகிச்சை நிலையத்தில் அர்ப்பணிப்புடன் கடமைபுரியும் வைத்திய பணியாளர்களின் சிற்றுண்டி உணவு செலவுக்கென ரூபா 25000 ஐ மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கத்திடம் கையளித்தனர். இந்த அன்பளிப்புப்பொருட்கள் கையளிக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு முஸ்லீம் வர்த்தகர் நலன்புரி அமைப்பின் தலைவர் கே.எம்.எம்.கலீல், அங்கத்தவர் வர்த்தகர் எம்.சீ.எம்.சியாட் , மட்டக்களப்பு ஜாமியுஸ் ஸலாம் ஜும்மா பள்ளிவாயல் நிருவாகிகளான எம்.எஸ்.எஸ்.பாயிஸ்.கணக்காளர் கே.எம்.சுகைர் பேஸ் இமாம் மௌலவி காபில் நியாஸ் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

DSC 0804 resized DSC 0806 resized DSC 0810 1 resized DSC 0834 resized