
கொரோனா வைரஸ் பாதிப்பில் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் இரண்டாம் கட்ட ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு பிரதேசசெயலாளர் திரு.எஸ்.சுதாகரன் தலைமையில் 20.05.2020 புதன்கிழமை அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப்பணியில் உதவிப் பிரதேசசெயலாளர் திருமதி சுபா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு.கலைச்செல்வி வாமதேவன் உள்ளிட்ட அதிகாரிகள் குழு இரண்டாம் கட்ட ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் மேற்பார்வை கடமையில் ஈடுபட்டனர்.
இதன்படி இப்பிரிவில் சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்கள் 7640 க்கும் காத்திருப்போர் பட்டியலிலுள்ள குடும்பங்கள் 2250 க்கும் தொழில்பாதிக்கப்பட்ட குடும்பங்கள் 268 க்கும் மேல்முறையீடு செய்த 48 குடும்பங்களுக்குமாக இப்பிரிவில் சுமார் ஐந்து கோடியே பத்து இலட்சம் ரூபா பத்தாயிரத்து இருநூற்றி ஆறு (10206) குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்தப்பணிகளில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன் ,முகாமைத்துவப்பணிப்பாளர் திரு.கே.தங்கதுரை சமுர்த்தி புதுமண்டபத்தடி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கே.தில்லையம்மா , கரவெட்டி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. அசோக்குமார் பிரியதர்சினி, மகிழவட்டவான் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.புவனேஸ்வரி ஜெயசிங்கம், ஆயித்தியமலை வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.கிரிஸ்ணவேணி கநேசனாதன் ஆகியோரும் ஈடுபட்டனர்.







