IMG 0299 1 resized

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் பட்டதாரிகளின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர்  27.05.2020 அன்று கையளிக்கப்பட்டது.

அகில இலங்கை பட்டதாரிகளின் சங்கத்தினால் நாடளாவிய ரீதியில் 27.05.2020 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை கருதி முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பட்டதாரிகளின் சங்கத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ள தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த மகஜரில் பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனம் இடைநிறுத்தப்பட்டது தொடர்பாக அரசிடம் கோரிக்கை வைத்து அதற்கான தீர்வினை பெற்று தர வேண்டும் என்றும் பயிற்சிக்காக அனுப்பப்பட்ட கடிதங்கள் பட்டதாரிகள் என்ற வகையில் கணக்கிடப்பட வேண்டும் எனவும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் வருமானம் இன்றி இருக்கின்ற பட்டதாரிகளின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும் தேர்தலை காரணம் காட்டி நியமன கடிதங்களை வழங்காது நியமனக்கடிதம் கிடைத்த பட்டதாரிகளை வேலை பொறுப்பேற்காது தடுத்தமை போன்ற கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி குறித்த மகஜர் இன்று மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி .கலாமதி பத்மராஜா அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

IMG 0258 resized IMG 0275 resized IMG 0299 1 resized