DSC 0193 resized

கிழக்கு மாகாண ஆளுனர் திருமதி அனுராதா ஜஹம்பத் அவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுனர்கள் குழு 11.06.2020 அன்று காலை மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள ஆளுனர் அலுவலகத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை குறைகள் தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றது.

 

குறிப்பாக போதனா வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளாவன. தற்போது செயலிழந்த நிலையில் காணப்படுகின்ற CT ஸ்கேனர் இயந்திரம் பழுதடைந்த நிலையில் மூன்று வார காலமாக காணப்படுகின்றது. இவ் இயந்திரமானது தற்காலத்திற்கேற்ற நவீன தொழில்நுட்ப இயந்திரமாகவும் இதில் ஏற்பட்டிருக்கின்ற பழுது காரணமாகவும் இவ்வியந்திரம் ஆரம்ப காலத்தில் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடப்பட்டது. CT ஸ்கேனர் இயந்திரமானது தற்போது செயலிழந்திருக்கின்ற காரணத்தினால் நோயாளர்களை அம்பாறை, கல்முனை ஆகிய வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டியுள்ளது. ஒரு நாளைக்கு 16 முதல் 25 வரையான நோயாளர்கள் வருகை தருவதனால் இவர்களை அம்பியுலன்ஸில் ஐந்து பேருக்கு மேலாக அனுப்பமுடியாமையும் அதை விட விபத்துக்களில் சிக்கிய நோயாளர்களை உடனடியாக வைத்தியம் செய்ய முடியாத நிலையும் காணப்பட்டு வருகின்றது.

இச் செயற்பாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய நவீன தொழில் நுட்பம் அடங்கிய CT ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை பெறுவதற்கான சகல உத்தியோக பூர்வ  நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருந்தும் தற்போது அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைப்பதிலே சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனை ஆளுனர் தன்னுடைய கவனத்திற்கு எடுத்து துரிதமாக பெறுவதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பொருத்தப்பட்டுள்ள புற்றுநோய்களுக்கான கதிர் இயக்க இயந்திரம் இதுவரை நோயாளர்களுக்கு பாவனைக்கு உட்படுத்தப்படாமல் உள்ளது. கிழக்கு மாகாணத்திற்கே குறிப்பாக இந்த புற்று நோய் பிரிவு மட்டக்களப்பு மாவட்டத்திலே நிறுவப்பட்டு பலகோடி ரூபா பெறுமதிவாய்ந்த இயந்திரங்கள் எதையும் செயல்படுத்தமுடியாத நிலையில் ஆளுனரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அறுபதிற்கு மேற்பட்ட வைத்திய நிபுனர்கள் இருக்கின்ற போதும் வைத்திய உபகரணங்கள் இயந்திரங்களின் தட்டுப்பாட்டினால் முழுமையான சிகிச்சையினை இங்கு வழங்கமுடியாதிருப்பது குறித்தும் ஆளுனருடன் கலந்துரையாடப்பட்டது.இக் கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா, வைத்திய நிபுணர் சசிகலா, வைத்திய நிபுணர் சுந்தரேஸ்வரன், வைத்திய நிபுணர் சுரேசினி ராஜேந்திரம், வைத்திய நிபுணர் நிர்மல் ராஜ், வைத்திய நிபுணர் அருள்நிதி, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித வணிய சிங்ஹ, ஆளுனர் செயலாளர் பிரசன்ன மத நாயக ஆகியோர் கலந்துகொண்டனர்.

DSC 0186 resized DSC 0190 resized DSC 0191 resized DSC 0193 resized

DSC 0195 resized DSC 0201 resized DSC 0202 resized DSC 0206 resized